வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2015 (17:50 IST)

வருமான வரி செலுத்தாமல் ’டிமிக்கு’ கொடுத்த நிறுவனங்களை வெளியிட்டது வருமான வரித்துறை

வருமான வரி செலுத்தாத 18 மிகப்பெரிய நிறுவனங்களின் பெயர்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
 
10 கோடிக்கு மேல் வரிசெலுத்த வேண்டியவர்களின் பெயர்களை வெளியிட்டது இதுவே முதன்முறை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் சுமார் 500 கோடி வரையில் அரசுக்கு வரிசெலுத்த வேண்டியதுள்ளது. இவற்றில் 11 நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
வருமானவரித்துறை வெளியிட்டுள்ள நிறுவனங்கள் பட்டியல்:
 
புளு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ரூ. 75.11 கோடி
சோமானி சிமெண்ட் - ரூ. 22.47 கோடி
ஆப்பிள்டெக் சொல்யூஷன் - ரூ. 27.07 கோடி
ஜூபிட்டர் பிசினஸ் 21.31 கோடி
ஹிராக் பயோடெக் ரூ. 18.54 கோடி
 
குஜராத்தில் உள்ள நிறுவனங்கள்:
 
பயோ பார்மா & ஹெல்த்கேர் லிமிடெட். - ரூ. 17.69 கோடி
பன்யன் & பெர்ரி அலாய்ஸ் - ரூ. 17.48 கோடி
லக்மிநாராயண் டி தாக்கார் - ரூ. 12.49 கோடி
விராக் டையிங் & பிரிண்டிங் - 18.57 கோடி
பூனம் இண்டஸ்ட்ரீஸ் - ரூ. 15.84 கோடி
கன்வர் அஜய் புட் பிரைவேட் லிமிடெட் - ரூ. 15 கோடி ஆகும்.
 
மேலும் சில:
 
கோல்டுசுஹ் டிரேட் இந்தியா - ரூ. 75.47 கோடி (ஜெய்பூர்)
விக்டோர் கிரிடிட் & கன்ஸ்டரக்சர் -ரூ. 13.81 கோடி (கொல்கத்தா)
நோபல் மெர்கண்டைஸ் - ரூ. 11.93 கோடி (மும்பை)
ஜிகே தர்னே - ரூ. 38.31 கோடி (புனே)
 
இவர்கள் உடனடியாக இதுவரை செலுத்தாத வருமான வரியை உடனடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து வருமான வரித்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது இணையத் தளத்தில் இந்த பெயர்கள் வெளியிடுவதன் நோக்கம், சாதாரண மக்கள் வருமானவரித்துறைக்கு உதவ முன்வரமுடியும் என்பதுதான்” என்று தெரிவித்துள்ளனர்.