1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj

மருத்துவரும், செவிலியரும் மாறிமாறி கன்னத்தில் அறைந்த சம்பவம்

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இந்தியாவில், சாதாரண மக்கள் முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா இரண்டாம் அலையினால், மக்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உயுரிழப்பு ஏற்பட்ட நிலையில்,. உச்சநீதிமன்றம் மற்றும் மாநில நீதிமன்றங்கள் தலையிட்டு இதில் மக்களின் நலம் காக்க நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரும் செவிலியரும் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் வாக்குவாதம் செய்துவந்த நிலையில் திடீரென்று இருவரும் கன்னத்தில் மாறிமாறி அறைந்தனர். இதுகுறித்த வீடியோ வைரலாகிவருகிறது.

அதிகப் பணிச்சுமை காரணமாக இவர்கள் இருவரும் கை கலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.