வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (13:47 IST)

நிதிஷ் - லல்லு கூட்டணியால் பீகாரில் மாற்றம் வந்துவிடப்போவதில்லை: அமீத்ஷா

நிதிஷ்குமார் - லல்லு பிரசாத் கூட்டணியால் பீகாரில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை என்று பா.ஜ.க. தலைவர் அமீத் ஷா விமர்சித்து உள்ளார்.


 
 
பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல் அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பீகாரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமீத்ஷா கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது அவர் கூறுகையில், "லல்லு - நிதிஷ் கூட்டணியால் பீகாருக்கு எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. மாற்றத்தை பா.ஜ.க.வால் மட்டுமே அளிக்க முடியும். மதங்களின் பெயரில் அவர்கள் சமூகத்தை இரண்டாகப் பிரிக்கிறார்கள். தேர்தலில் லல்லு - நிதிஷ் கூட்டணி வெற்றி பெற்றால், காட்டாட்சி நடத்தும் காட்டுராஜாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்துவிடும்.
 
பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறும் என்பது தெளிவாக தெரிகிறது. எதிர்வரும் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.  பீகாரில் லல்லுவும் நிதிஷ்குமாரும் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி உள்ளனர். ஆனால் இன்றளவும் பீகார் வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளது" . இவ்வாறு தெரிவித்தார்.