1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (07:42 IST)

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குநரின் கணவர் கைது!

icici
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குநர் சந்தா கோச்சார் அவர்களின் கணவர் தீபக் கோச்சார் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஐசிஐசிஐ வங்கியிலிருந்து வீடியோகான் என்ற நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் முறைகேடாக கடன் கொடுக்க சாந்தா கோச்சார் கணவர் தீபக் கோச்சார் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது இந்த கடன் தொகையை சாந்தா கொச்சார் தன்னுடைய சொந்த நிறுவனத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டது
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சாந்தா கொச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் விசாரணை செய்தனர். பலமுறை விசாரணைக்கு பின்னர் தற்போது தீபக் கோச்சார் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து சாந்தா கொச்சார் தரப்பில் விளக்கம் அளித்தபோது ’தகுதியின் அடிப்படையில்தான் கடன்கள் வழங்கப்பட்டதாகவும் தனது கணவரின் நிறுவனங்களுடன் எந்த கடனுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது