செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (11:45 IST)

எல்லையில் இந்திய ராணுவ விமானங்கள் ஒத்திகை: போருக்கு ஆயத்தமா?

லாடாக் எல்லையில் இந்திய ராணுவ விமானங்கள் ஒத்திகையில் ஈடுப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் பலியானார்கள்.  
 
எனினும் சீன ராணுவம் எல்லையில் அத்து மீறியதாலேயே இந்த மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனா – இந்தியா இடையே உறவுநிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதுடன், இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளிலும் சீன நிறுவனங்களின் பங்களிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு பிறகு லடாக் எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவம் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியது. 
 
தற்போது இந்திய, சீன எல்லையில் நேற்றிரவு இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானங்களில் வீரர்கள் ஒத்திகை பார்த்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.