வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (19:58 IST)

சிறை செல்வதில் கவலையில்லை, இதை நினைத்தால் தான் கவலையாய் இருக்குது: ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் விசாரணை வளையத்தில் 15 நாட்கள் வைக்கப்பட்டார். அதனையடுத்து சிபிஐ காவல் இன்று முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவரை திஹார் சிறையில் வரும் 19ஆம் தேதி வரை அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 
 
இதனையடுத்து ப.சிதம்பரத்தை திஹார் ஜெயிலுக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ப.சிதம்பரம், ‘தான் ஜெயிலுக்கு போவதை பற்றி கவலைப்படவில்லை என்றும் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டும் தான் கவலைப்படுவதாகவும் தெரிவித்தார்.
 
 
நேற்று முன்தினம் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, 5 சதவீதம் என்று செய்தியாளர்களிடம் ஐந்து விரல்களை காட்டி இந்திய பொருளதாரம் 5 சதவீதம் சரிந்துவிட்டதை ப.சிதம்பரம் குறிப்பிட்டார் என்பது தெரிந்ததே. நாட்டின் பொருளாதாரம் பாஜக ஆட்சியில் சரிந்துவிட்டதாக கடந்த ஐந்து ஆண்டுகளாக குறிப்பிட்டு வரும் ப.சிதம்பரம், சிறைக்கு செல்லும்போது நாட்டின் பொருளாதாரம் குறித்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது