1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:00 IST)

தாலிபன்களால் விலை உயரும் ஹைதராபாத் பிரியாணி: பின்னணி என்ன??

ஆப்கானை தாலிபன்கள் கைப்பற்றியதால் ஹைதராபாத் பிரியாணியின் விலை எகிறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகிய நிலையில் தலீபான்கள் அமைப்பு நாட்டை கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் குறித்து தலீபான்கள் எதுவும் இதுவரை அறிவிக்கவில்லை. அதேசமயம் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியதை உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன.
 
இந்நிலையில், ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள் பாகிஸ்தான் வழியாக நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்தை நிறுத்தியிருக்கிறது. இதன் எதிரொலியாக இந்தியாவுக்கு இறக்குமதி ஆகி வந்த உலர் பழங்களின் விலை உயரத் துவங்கியுள்ளது.
 
இதனால் இந்தியாவில் ஹைதராபாத் பிரியாணியின் விலை எகிறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலர் பழங்கள் தான் ஹைதராபாத் பிரியாணி சிறப்புக்கு அஸ்திவாரமாக இருந்து வருகிறது. இந்தியா கிட்டத்தட்ட 85% உலர் பழங்கள் இறக்குமதியை ஆப்கானிஸ்தானிடமிருந்தே பெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.