வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2019 (16:27 IST)

எஸ்பிஐ வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் செய்வது எப்படி?

வங்கியில் குறிப்பாக எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மினிமம் பேலன்ஸ் தொகையை அக்கவுண்டில் மெயிண்டன் செய்து வரவேண்டும். இல்லையேல் அபராதத்தொகையை தீட்டிவிடுவார்கள். மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கிடைத்த அபராதம் மட்டுமே இவ்வங்கிக்கு கோடிக்கணக்கில் கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது

இந்த நிலையில் எஸ்பிஐ வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய ஒரு வழி உள்ளது. அதுதான் BSBD வங்கிக் கணக்கு. பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற இந்த அக்கவுண்டை ஓப்பன் செய்தால் எந்தவித மினிமம் பேலன்ஸும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் வங்கிக்கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபட்ச தொகையையும் வைத்து கொள்ளலாம்

மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு இருப்பது போல் இந்த வங்கிக்கணக்கிற்கும் டெபிட் கார்டுகள் உண்டு. மேலும் இதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு. அதேபோல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் காசோலைகளை டெபாசிட் செய்வதற்கும், பணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் இந்த அக்கவுண்ட் உள்ளவர்கள் பணம் பரிமாற்றத்தை ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

இந்த கணக்கில் மேலும் ஒரு சலுகையாக 1 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தால் அந்த இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.