திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (11:52 IST)

மீண்டும் பகீர் சம்பவம்!! விடுதியில் ரகசிய கேமரா; வசமாய் சிக்கிய விடுதி உரிமையாளர்

மீண்டும் பகீர் சம்பவம்!! விடுதியில் ரகசிய கேமரா; வசமாய் சிக்கிய விடுதி உரிமையாளர்
சென்னையையடுத்து மும்பையில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் நகரத்தை நோக்கி வருகின்றனர். அப்படி வரும் பெண்கள் பலர் பிஜி(பேயிங் கெஸ்டில்) தங்குகின்றனர். 
மீண்டும் பகீர் சம்பவம்!! விடுதியில் ரகசிய கேமரா; வசமாய் சிக்கிய விடுதி உரிமையாளர்
சமீபத்தில் சென்னையில் சஞ்சீவி என்ற விடுதி உரிமையாளர், மாணவிகளின் அறைகளில் ரகசிய கேமரா வைத்ததற்காக போலீஸார் அவனை கைது செய்தனர். இது தமிழகத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் விடுதிகளை வரைமுறைபடுத்த பல்வேறு கோட்பாடுகள் விதிக்கப்பட்டன.
 
இந்நிலையில் மும்பையில் கிர்கான் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் அதன் உரிமையாளர் ரகசிய கேமிரா வைத்து, மாணவிகளை வீடியோ எடுத்து வந்துள்ளான். வாட்ச், ஃபேன், பாத்ரூம் உள்ளிட்ட இடங்களில் கேமரா வைத்து பெண்களை ஆபாசமாக படமெடுத்திருக்கிறான் அந்த மனித மிருகம்.
 
இதனை கண்டுபிடித்த மாணவி ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் அந்த அயோக்கியனை கைது செய்து அவனிடம் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளனர். இவனை மாதிரி ஜென்மங்களை உடனடியாக சுட்டுத் தள்ளவேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறியுள்ளனர்.