மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மருத்துவமனையில் அனுமதி


sivalingam| Last Modified ஞாயிறு, 18 ஜூன் 2017 (22:19 IST)
பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் அவர்கள் திடீரென  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

 மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பதற்கு சிரமப்பட்ட ராஜ்நாத் சிங்கை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் சில மணி நேரத்தில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.


 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :