வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (09:41 IST)

ரயில் விபத்து: சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து ரயில்வே அமைச்சர் சொன்ன தகவல்!

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது.  பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.
 
இதையடுத்து அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  இதில் 299 பேர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
இந்நிலையில்  இன்று விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தற்போதைக்கு மீட்பு பணிகளில் தான் எங்கள் கவனம் உள்ளது. விபத்து குறித்து உயர் மட்ட குழு விரிவான விசாரணை நடத்தும். விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பின்னர் தெரியவரும். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என  அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.