ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 மே 2021 (09:10 IST)

இனப்படுகொலைக்கு சமமான சம்பவங்கள் நடக்கிறது! – உயர்நீதிமன்றம் வேதனை!

இந்தியாவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் உயிரிழப்பது இனப்படுகொலைக்கு இணையாக இருப்பதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தினசரி பாதிப்புகள் கடந்த சில நாட்கள் முன்னதாக அதிகபட்சமாக 4 லட்சம் வரை பதிவானது. இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் பலர் உயிரிழந்து வரும் சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆக்ஸிஜன் இன்றி மக்கள் உயிரிழக்கும் சம்பவம் குறித்து வழக்கில் கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் ”இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழக்கும் சம்பவம் ஒரு இனப்படுகொலைக்கு இணையாக இருக்கிறது” என கூறியுள்ளது.