1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2022 (18:03 IST)

காஷ்மீரில் ஹெலிகாப்டர் விபத்து

இந்திய ராணுவத்தின் சீட்டா என்ற ஹெலிகாப்டர் வடக்கு குரேஸ் செக்டார் பகுதியில் விபத்திற்குள்ளானது.

அங்குள்ள வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும்  இதில் உயிரிழப்பு  நடத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர சென்ற ராணுவ  ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.