1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (16:07 IST)

கனமழையால் சென்னை போல் தத்தளிக்கும் பெங்களூரு நகரம்

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பெங்களூரு நகரில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெங்களூருவில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பெய்யத் தொடங்கி மழை விடிய விடிய பெய்தலால் நகரின் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருகெடுத்து ஓடுகிறது.
 
அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் படகில் உணவு பொருட்களை எடுத்து சென்று அங்குள்ள மக்களுக்கு கொடுத்தனர். பெங்களூருவில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
 
மேலும் இன்னும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இதே போல் சென்னை நகரம் போல் பெங்களூரு நகரமும் தத்தளிக்க வாய்ப்புள்ளது.