திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 14 ஜூன் 2017 (17:59 IST)

இந்திய கிராமத்திற்கு ட்ரம்ப் பெயர்? தொண்டு நிறுவனம் அசத்தல்

சுலாப் சர்வதேச தொண்டு நிறுவனம், திறந்தவெளி கழிப்பிடமில்லா கிராமத்திற்கு டொனால்டு ட்ரம்ப் என பெயரிட்ட உள்ளது. 


 

 
சுலாப் சர்வதேச தொண்டு நிறுவனம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் தற்போது தனது சேவையை தொடங்கியுள்ளது. ஹரியானா மாநிலம் மேவத் என்ற கிராமத்தில் போதிய கழிவறைகளை கட்டிக்கொடுத்து, திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழித்துவிட்டது.
 
இந்நிலையில் இந்த கிராமத்திற்கு இன்னும் சில நாட்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெயரை வைக்க உள்ளதாக சுலாப் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சுலாப் தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிந்தேஸ்வர் பதக் கூறியதாவது:-
 
இந்த மாற்றம் இந்தியாவின் தூய்மையை உலகிற்கு பறைசாற்றும் முயற்சி. கார்ப்பரெட் நிறுவனங்கள் கிராமங்களை தத்தெடுத்து அதனை முன்னேற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.