வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (13:00 IST)

கூப்பிட்டா வறீங்களான்னு பாத்தேன்..! – போலீஸுக்கு தண்ணி காட்டிய குடிமகன்!

ஹரியானாவில் மது அருந்திவிட்டு போலீஸை அவசரம் என அழைத்த மது பிரியரின் செய்கை வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதுமே மது பிரியர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் ஆங்காங்கே சில பகுதிகளில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு செய்யும் சேஷ்டைகள் சில சமயங்கள் வைரலாகி விடுகின்றன.

அப்படியான ஒரு சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது. ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் நரேஷ் குமார். அவர் நன்கு மது அருந்தியிருந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென காவல் அவசர அழைப்பு எண்ணான 112க்கு கால் செய்து அவசர உதவி தேவை என அழைத்துள்ளார்.

உடனடியாக போலீஸ் குழு ஒன்று அவர் இருந்த இடம் சென்றுள்ளனர். அவரிடம் எதற்காக அழைத்தார் என விசாரித்தபோது, அவசர எண்ணை தொடர்பு கொண்டால் நள்ளிரவில் கூட உதவிக்கு காவலர்கள் வருவார்கள் என கேள்விப்பட்டதாகவும், அது உண்மையா என்பதை சோதிப்பதற்காக அழைத்ததாகவும் கூறியுள்ளார். அவரது இந்த பதில் போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.