திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 20 ஜூலை 2017 (15:51 IST)

ஒரே நாளில் ரூ.70 லட்சம் திருடி அசத்திய ஹேக்கர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் ஆன்லைன் பேங்கிங் மூலம் ஹேக்கர்கள் தொழிலதிபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.70 லட்சம் தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


 

 
பஞ்சாப் மாநிலம் லூதியனாவில் உள்ள பிரபல தொழிலதிபர் அருண் பெரி ஆடை தொழிற்சாலை நடத்தி வருகிறார். 18ஆம் தேதி அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.70 லட்சம் தொகை வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாக இமெயில் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
விசாரணையில் ஹேக்கர்கள் அவரது ஆன்லைன் பேங்கிங் கணக்கு மூலம் பணத்தை 5 வெவ்வேறு வங்கி கணக்கிற்கு அனுப்பியது தெரியவந்தது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருண் மொபைல் எண்ணுக்கு குறிஞ்செய்தி வரவில்லை. மேலும் நாள் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் வரை மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும் நிலையில் இவர்கள் ரூ.70 லட்சம் தொகையை பரிமாற்றம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.