1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2016 (16:54 IST)

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி?: கூகுள் தேடலில் குஜராத் முதலிடம்!

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி?: கூகுள் தேடலில் குஜராத் முதலிடம்!

பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்படுவது கண்ணுக்கு தெரிகிறது ஆனால் கருப்பு பணத்தை வைத்திருப்போர் அவதிப்படுவது கண்ணுக்கு தெரியவில்லை அவ்வளவுதான்.


 
 
500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததும் இந்தியாவே அதிர்ந்தது. கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்க எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை என கூறப்பட்டது. இந்த பணத்தை மாற்ற வங்கிகளை பொது மக்கள் நாடலாம் என அறிவுறுத்தப்பட்டது.
 
ஆனால் வருமானத்துக்கு அதிகமான பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தால் அதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும், இல்லாத பட்சத்தில் 200 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது. இதனால் கருப்பு பணம் வைத்திருப்போர் அதனை என்ன செய்வது என தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என கூகுள் இணையதளத்தில் அதிகமானோர் தேடியுள்ளனர். கடந்த 6 நாட்களாக கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி என தேடியவர்களில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் முதலிடம் வகிக்கிறது.
 
ஜார்கண்ட் இரண்டாவது இடத்தையும், ஹரியானா மூன்றாவது இடத்தையும், மகாராஷ்டிரா நான்காவது இடத்தையும், சத்தீஸ்கர் ஐந்தாவது இடத்தையும், பஞ்சாப் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.
 
ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், டில்லி, உத்திரகண்ட் ஆகிய மாநிலங்கள் 7 முதல் 10 இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் 22-வது இடத்தையும், கேரளா 23-வது இடத்தையும் பிடித்துள்ளது.