திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (12:00 IST)

குஜராத்தில் 150 கோடி செலவில் பஸ் நிலையம்: மோடி அராஜகம்!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 150 கோடி செலவில் பஸ் நிலையம் உருவாக்கப்பட உள்ளது. அதன் மாதிரி புகைப்படங்கலும் வெளியாகியுள்ளது.


 
 
கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இதற்கான பூமி பூஜை போடப்பட்டுள்ளது. ஒரு விமான நிலையத்தை மாடலாக கொண்டு இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
 
எட்டு மாடியில் கட்டப்பட உள்ள இந்த பேருந்து நிலையத்தில் மால், உணவகம், தியேட்டர் போன்ற பல வசதிகள் அமைய உள்ளன. 


 

 
ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமிரா போன்ற பாதுகாப்பு வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளன. தரைத்தளத்தில் பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்படயுள்ளது. இந்த பேருந்து நிலையம், இன்னும் ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக விவாசயிகளையும், தமிழகத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மோடி தனது தொகுதியான குஜராத்தில் மட்டும் இவ்வாறு வளர்ச்சிகளை கொண்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தவிர ரூ. 150 கோடியில் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டிய கட்டாயன் என்னவென பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.