வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Lenin AK
Last Modified: வியாழன், 2 அக்டோபர் 2014 (13:14 IST)

வேட்பாளர்கள் இல்லங்களில் கழிவறை அவசியம்: குஜராத் அரசு உத்தரவு

தேர்தலில் போட்டியிடும் பஞ்சாயத்து வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரது இல்லங்களிலும் கழிவறை அவசியம் இருக்க வேண்டும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
 
குஜராத்தில் புதன் (01.10.14) அன்று நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில், ‘ஸ்வாச் பாரத் அபியான்‘ என்ற திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய ஆனந்தி பட்டேல் இந்த முடிவை அறிவித்தார்.
 
குஜராத் சபாநாயகரும் அமைச்சருமான நிதின் பட்டேல், பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் இது அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். மேலும் அவர் இது குறித்துக் கூறுகையில், “ஒவ்வொரு பஞ்சாயத்து வேட்பாளர்களின் முதல் ஆதாரமாக அவர்களது இல்லங்களில் கழிவறை வசதி உள்ளதா என்பது எடுத்துக்கொள்ளப்படும்.
 
இந்த சட்டம் மாவட்டம் முதல் கிராமம் வரை, அனைத்துப் பகுதிகளிலும் அமல்படுத்தப்படுகிறது“ என்றும் தெரிவித்தார்.
 
மாநில முதலமைச்சர் ஆனந்தி பட்டேல் இது குறித்துக் கூறுகையில், “இந்தத் திட்டம் அரசியல் ஆதாராத்திற்கு அல்ல. நாங்கள் ஏற்கனவே எதிர்கட்சித் தலைவருக்கும் காங்கிரஸ் தலைமை கொறடா பல்வந்த் சிங் ராய்புட்க்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்” என்று கூறினார்.