1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2019 (10:35 IST)

தவறான விளம்பரங்களுக்கு 10 லட்சம் அபராதம்! – அரசு அதிரடி!

தனியார் உணவுப்பொருள் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் தவறான முன்னுதாரணங்களை பரப்பினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

துரித உணவு, நொறுக்கு தீனி போன்றவற்றை விற்கும் தனியார் நிறுவனங்கள் தவறான ஒப்பீடுகளை, முன்னுதாரணங்களை தங்கள் விளம்பரங்களில் காண்பிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இயற்கை உணவுகளை கெடுதல் என்று கூறி துரித உணவுகளை நியாயப்படுத்தும் விளம்பரங்களும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள இந்திய உணவு பாதுகாப்பு துறை ’ஆரோக்கியமான உணவு பழக்கத்தை நாடு முழுவது கொண்டு செல்ல அரசு முயற்சித்து வரும் வேளையில் தனியார் நிறுவனங்கள் தவறான முன்னுதாரணங்களை கொண்டு விளம்பரம் செய்து வருகின்றனர் எனவும், தவறான முன்னுதாரணங்களை விளம்பரப்படுத்துவோருக்கு 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.