திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜனவரி 2018 (06:01 IST)

ரத்ததானம் செய்தால் சம்பளத்துடன் விடுமுறை: மத்திய அரசு அதிரடி

ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகரிக்க மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி அரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு:

தற்போது ரத்த தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகின்றது. ஆனால் ரத்தத்தின் உட்பிரிவுகளை தானமாக வழங்குபவர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுவது இல்லை.

ரத்த தானம் அல்லது சிகப்பணுக்கள், பிளாஸ்மா, ரத்தவட்டுக்கள் உள்ளிட்டவற்றை தானமாக வழங்குபவர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற ரத்த வங்கிகளில் வேலைநாட்களில் ரத்ததானம் செய்ய வேண்டும். ஆண்டிற்கு நான்கு முறை இந்த சிறப்பு சாதாரண விடுப்பை எடுக்கலாம்

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.