1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2017 (13:29 IST)

துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்

துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரன் கோபால்கிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகள் களமிறக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 

 
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு துணை ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற உள்ளது. ஜனாதிபதி பதிவியை போலவே துணை ஜனாதிபதி பதிவி காலம் 5 ஆண்டு. தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
 
துணை ஜனாதிபதி டெல்லி மேல் சபையின் தலைவராகவும் இருப்பார். தற்போது டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது ஆலோசித்து வருகிறார்கள்.  
 
இந்நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக காந்தி பேரன் கோபால்கிருஷ்ண காந்தியை களமிறக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோபால கிருஷ்ண காந்தி மேற்கு வங்க கவர்னராகவும், ஜனாதிபதி செயலாளராகவும் பணியாற்றியவர்.