திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (20:21 IST)

க்ளவுட் தொழில்நுட்பத்திற்காக புதிய அலுவலகம்: இந்தியாவில் தொடங்க கூகுள் முடிவு

கிளவுட் தொழில்நுட்பத்திற்கான இந்தியாவில் புதிய அலுவலகத்தை கூகுள் நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கும் நிலையில் கிளவுட் தொழில் நுட்பத்திற்கு ஆகவே புதிய அலுவலகம் ஒன்றை இந்தியாவில் திறக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
இந்தியாவிலுள்ள புனே நகரில் கிளவுட் தொழில்நுட்பத்தை விரிவு செய்ய கூகுள் நிறுவனம் புதிய அலுவலகத்தை திறக்க உள்ளதாகவும் இந்த ஆண்டிற்குள் இந்த அலுவலகம் அமைந்துவிடும் என்றும் கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
கூகுள் நிறுவனம் இந்தியாவில் விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே புதிய அலுவலகம் தொடங்க உள்ளதை அடுத்து இந்தியர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்தியர்களுக்கு புதிய தொழில்நுட்பமும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது