24 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட தோசை.. எவ்வளவு தெரியுமா?
24 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட தோசை.. எவ்வளவு தெரியுமா?
சுத்தமான 24 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட தோசை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தோசையின் விலை ரூ.1000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தினால் முலாம் பூசப்பட்டிருக்கும் இந்த தோசை குறித்த செய்தியை அறிந்ததும் அந்த பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து இந்த தோசையை சாப்பிட்டு வருகின்றார். சாதாரணமான தோசை 30 முதல் 100 ரூபாய் வரை விற்பனை ஆகி வரும் நிலையில் இந்த தோசையின் விலை ரூ.1000 என்றாலும் கூட இதனை ஏராளமானோர் வாங்கிய ருசி பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தோசையை தவாவில் ஒன்றிய பிறகு நெய் ஊற்றுவதற்கு பதிலாக தங்கத்தை தோசத்தை மீது ஊற்றுகிறார்கள் என்றும் இந்த தங்க கரைசலுக்கு தான் இவ்வளவு விலை என்றும் அந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தோசையில் முந்திரி பாதாம் உள்பட பலவகையான சட்னிகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு நாளைக்கு குறைந்தது 8 தோசைகள் வரை விற்பனை ஆகி வருவதாக அந்த கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran