Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மகளின் சடலத்திற்கு தங்க கொலுசு: தந்தையின் பாச பிணைப்பு!!

Last Modified: புதன், 28 டிசம்பர் 2016 (12:30 IST)

Widgets Magazine

கேரள மாநிலம் மால்மோட்டம் நகரைச் சேர்ந்த அனில் என்பவரது மகள் அனகா. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். 


 
 
அனிலுக்கு தனது மகள் அனகா என்றால் கொள்ளை பிரியம். அனகாவும் தனது தந்தை மீது உயிரையே வைத்திருந்தாள்.
 
தங்க கொலுசு அணிய வேண்டும் என்ற ஆசை அனகாவுக்கு இருந்துள்ளது. இதனை தனது தந்தையுடம் தெரிவித்தார். ஆனால் பணபற்றாக்குறை காரணமாக அனிலால் தங்க கொலுசினை வாங்கி கொடுக்க முடியவில்லை.
 
இதற்கிடையில் ஓர் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி பள்ளியை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அனகாவின் மீது டெம்போ வேன் ஒன்று மோதியது.
 
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அனகா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கிறிஸ்துமஸ் தினத்தன்று அனகா உயிரிழந்தார்.
 
இந்நிலையில் இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, வேகமாக நகைக் கடைக்கு சென்ற அனில், தனது மகள் ஆசைப்பட்டு கேட்டு தங்க கொலுசினை வாங்கி கொண்டு வந்து உயிரற்று கிடந்த தனது மகளின் காலில் மாட்டிவிட்டுள்ளார்.
 
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை உருக வைத்துள்ளது. அந்த தங்க கொலுசின் ஓசை மகள் புதைக்கப்பட்டாலும், தந்தையின் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சசிகலா குடும்பத்தின் கருப்பு பக்கத்தை வெளிச்சம்போட்டு காட்டும் வீடியோ: வீட்டை இழந்த கங்கை அமரன்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க முயற்சிக்கும் சசிகலா மீது நாளுக்கு நாள் பல ...

news

ஏ.டி.எம்-ல் வரிசையில் நின்ற பெண்ணிற்கு பிரசவம் - அரசு நிதி உதவி

ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்ற நிறைமாத கர்ப்பிணி அங்கேயே குழந்தை பெற்ற ...

news

பாகிஸ்தானில் கள்ளச்சாராயம் விற்பனை: 30 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் சிலர் கள்ளத்தனமாக சாராயம் ...

news

ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டார்கள்; ஆதரம் இருக்கிறது: இன்று மாலை வெளியாகும்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். ஆனால் அவரது கன்னத்தில் எம்பாமிங் ...

Widgets Magazine Widgets Magazine