கோ பேக் மோடி…புனேவில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள்!
பல்வேறு வளர்ச்சி திட்டம் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட நாளை மாகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் புனேவில் உள்ள தக்துசேத் கோவிலில் நாளை சாமி தரிசனம் மற்றும் பூஜை செய்யவுள்ளார்.
புனேவில் நாளை காலை 11:45 மணியளவில் நடக்கும் விருது விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவருக்கு லோக்மான்யா திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது. தேசிய சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிலையில் இதன் 41 வது விருதை பிரதமர் மோடி பெறவுள்ளார்.
இந்த நிலையில், நாளை பிரதமர் மோடி புனேவுக்கு செல்லவுள்ள நிலையில், புனே நகர இளைஞர் காங்கிரஸ் நகரம் முழுவதும் சாலையோரம் பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லுங்கள். நாடாளுமன்றத்தை எதிர்க்கொள்ளுங்கள் என்று கூறி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் நாட்டில் பற்றி எரியும்போது, ஏன் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என அந்தப் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.