Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பள்ளி வாகனத்தில், பெண் பாதுகாவலர்கள் முன்னிலையில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 6 பிப்ரவரி 2017 (11:46 IST)
பள்ளி வாகனத்தில், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதற்காக வாகன ஓட்டுனரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

 
 
சிறுமியிடம் சில மாற்றங்களை உணர்ந்த தாயார், அவளிடம் விசாரித்த போது, பள்ளி வாகன ஓட்டுனர் மாமா தன்னுடைய பள்ளி சீருடையை நீக்கி, துன்புறுத்தியதாகவும், அதனால் கடுமையான வலி ஏற்பட்டுள்ளதாகவும் தனது தாயிடம் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக பள்ளி முதல்வரிடம் கூறி, வாகன ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திய போது, அவர் காவல்துறையில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். 
 
பள்ளி வாகனத்தில் 2 பெண் பாதுகாவலர்கள் இருந்த நிலையில், இதுபோன்ற பாலியல் சீண்டல் சம்பவம் தனது மகளுக்கு நிகழ்ந்திருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்துறையிடம் குற்றம்சாட்டியுள்ளார்.
 
இதனிடையே குற்றம்சாட்டப்பட்டுள்ள பள்ளி வாகன ஓட்டுனர், 2 பெண் பாதுகாவலர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :