இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தரும் இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

Murugan| Last Updated: புதன், 4 ஜனவரி 2017 (11:40 IST)
தெருவில் நடந்து செல்லும் ஒரு இளம்பெண், அங்கு வரும் வாலிபர்களால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படும் சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
பெங்களூரின் எம்.ஜி.சாலையில், புதுவருட கொண்டாட்டத்தின் போது சில இளம்பெண்களுக்கு, வாலிபர்கள் சிலரால் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு மகளின் இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் அதிகாலை தெருவில் நடந்து செல்லும் ஒரு இளம்பெண்ணிடம் வாலிபர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
 
பெங்களூரின் கம்மானாஹாலி என்ற பகுதியில், ஒரு இளம் பெண் ஆட்டோவிலிருந்து இறங்கி சற்று தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து செல்கிறார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்கள் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். அதன் பின் அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு அவர்கள் சென்றுவிடுகின்றனர்.
 
இவை அனைத்தும் அந்த தெருவில் இருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் பெங்களூரில் மீண்டும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த வீடியோவை வைத்து சம்பந்தப்பட்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :