1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2017 (11:47 IST)

இளம்பெண் காரில் கடத்தி கற்பழிப்பு : சாலையில் வீசி சென்ற கொடூரம்

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை, ஒரு கும்பல் காரில் கடத்தி சென்று கற்பழித்த விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
டெல்லியில், நிர்பயா என்ற பெண்ணை ஓடும் பேருந்தில் கற்பழித்து, சாலையில் வீசி சென்ற விவகாரம் நாட்டையே உலுக்கியது. ஆனாலும், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது.  முக்கியமாக குர்கான், நொய்டா ஆகிய பகுதிகளில் பாலியல் வன்முறைகள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது. 
 
இந்நிலையில், அரியான குருகிராம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் சமீபத்தில், சோகானா என்ற பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரின் அருகே ஒரு கார் வேகமாக வந்தது. அதன் பின் அந்த காரில் இருந்தவர்கள் அந்த பெண்ணை காருக்குள் இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். 
 
ஓடும் காரிலேயே அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அவர்கள், நொய்டாவின் உள்ள ஒரு மருத்துவமனை அருகே அப்பெண்ணை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அப்பெண்ணை மீட்டனர். அதன் பின் அவர் தனது சொந்த குருகிராமில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். 
 
இந்த சம்பவம் கேள்விபட்டு, அவரிடம் புகாரை பெற போலீசார் சென்றனர். ஆனால், அப்பெண் புகார் எதுவும் கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. அந்த பெண் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.