வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (19:09 IST)

நோக்கியா போன் வெடித்து இளம்பெண் பலி...

ஓடிசா மாநிலத்தில் போனை சார்ஜ் போட்டப்படி பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர் போன் வடித்து பலியான சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
ஓடிசா மாநிலம் கெரியகனி கிராமத்தைச் சேர்ந்தவர் உமா ஓரம். இவர்  மொபைல் போனில் சார்ஜ் குறைந்த காரணத்தால், சார்ஜ் போட்ட நிலையிலேயே போன் பேசியுள்ளார். அப்போது போன் வெப்பம் அதிகரித்து வெடித்து சிதறியது.
 
சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த உமாவிற்கு கைகள் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமைனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் உமா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 
 
இந்த துயர சம்பவத்திற்கு நோக்கியா நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் உண்மை நிலை அறியவும் அதற்கு காரணம் தங்கள் நிறுவனத்தின் போன் தான் என்றால் என்ன காரணமாக இது ஏற்பட்டது என்பது அறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.