1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 22 மே 2023 (07:39 IST)

பெங்களூரில் கனமழை.. குடும்பத்துடன் காரில் சென்ற இன்போசிஸ் பெண் ஊழியர் பலி..!

பெங்களூரில் வரலாறு காணாத காண மழை பெய்ததை அடுத்து குடும்பத்துடன் காரில் சென்ற இன்போசிஸ் பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 
 
பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்துவரும் நிலையில் நேற்று இரவு ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பெங்களூரில் உள்ள பெரும்பாலான சாலைகள் மழை நீரால் மூழ்கியது. 
 
இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் பானுரேகா என்ற இளம் பெண் குடும்பத்துடன் ஊரை சுற்றி பார்க்க சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற கார் சுரங்கப்பாதையில் சிக்கியது. இதனை அடுத்து அந்த கார் நீரில் மூழ்கியதால் பானு ரேகா பரிதாபமாக உயிரிழந்தார் 
 
அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் சித்தராமையா பானு ரேகா குடும்பத்தினருக்கு ரூ.5  லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார் மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் ரக சிகிச்சை அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
 
 
Edited by Siva