கடத்தப்பட்ட சிறுமி கர்ப்பம் - 12 வாலிபர் கைது


Murugan| Last Modified வெள்ளி, 14 ஜூலை 2017 (18:34 IST)
டெல்லியில் இரண்டு மாதத்திற்கு முன்பு காணமல் போன 13 வயது சிறுமி, கர்ப்பத்துடன் திரும்பி வந்திருப்பது அவரின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
தென்கிழக்கு டெல்லி பகுதியில் வசிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மே மாதம் 6ம் தேதி வெளியே செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பவே இல்லை. எனவே இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
ஆனால், சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், சிறுமியை தேடிக் கண்டுபிடிக்க பணம் வேண்டும் என நச்சரித்த போலீசார், சிறுமியின் தந்தையிடமிருந்து ரு.45 ஆயிரம் வரை கறந்துள்ளனர். 
 
இந்நிலையில், கடந்த சிறுமியை கடத்தி சென்ற கும்பலில் இருந்த ஒருவன், கடந்த 10ம் தேதி போலீசாரிடம் சரணடைந்தான். அவன் மூலமாக சிறுமியை போலீசார் மீட்டனர். மருத்துவ சோதனையில் சிறுமி 3 வார கர்ப்பமாக இருப்பது தெரிவந்துள்ளது.
 
விசாரணையில், சிறுமியின் வீட்டின் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்த 12 பேர், சிறுமியை கடத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 
 
சிறுமியின் தந்தையிடம் பணம் பறித்த போலீசார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :