மரணத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் காந்தியின் பேரன்
காந்தியின் பேரன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முதியவர் இல்லத்தில் அவரது மானைவியுடன் தங்கியுள்ளார்.
உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தியின் தடியை பிடித்துக்கொண்டு முன்னால் ஒரு சிறுவன் செல்வான். இந்த புகைப்படம் காந்தியின் அரிய புகைப்படங்களில் ஒன்று.
அந்த சிறுவன் காந்தியின் பேரன். காந்தி இறந்தப்பின் அமெரிக்கா சென்ற கானு ராம்தாஸ் காந்தி, அங்கு படிப்பை முடித்துவிட்டு நாசாவில் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். பின்னர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் சிவலட்சுமியை திருமணம் செய்தார்.
சிவலட்சுமி போஸ்டன் பலகலைக்கழகத்தில் ஆராச்சியாளர் மற்றும் பேராசிரியராக பணியாற்றினார். 2014ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இந்தியா திரும்பி வந்தனர்.
இந்தியாவில் இவர்களுக்கென்று சொத்து எதுவும் இல்லாததால், ஒரு இடத்தில் தங்காமல் வெவ்வேறு இடங்களில் தங்கி வந்தனர். சிறிது காலத்திற்கு பின் இவர்கள் இருவரும் முதியோர் இல்லத்தில் சேர்ந்தனர்.
பின்னர் டெல்லியில் உள்ள குரு விஷ்ரம் விருத் என்ற ஆசிரமத்திற்கு சென்றனர். இவர்கள் இருவரும் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பது, ஊடகங்களில் செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது காந்தியின் பேரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு பக்கவாதத்தால் மரணத்தை எதிர் நோக்கியுள்ளார். அவரது மனைவிக்கும் வயதானதால் நோய் பாதிக்கப்பட்டுள்ளார்.