வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:17 IST)

காங்கிரஸ் கட்சி தலைமையில் காந்தி குடும்பம் கிடையாது! – பிரியங்கா காந்தி உறுதி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விரைவில் தலைமை தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் அவர் கண்டிப்பாக காந்தி குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க மாட்டார் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் அதற்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் வலியுறுத்தியும் பதவியில் நீடிக்க அவர் மறுத்து விட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பொறுப்பில் சோனியா காந்தி இருந்து வருகிறார்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸின் தலைவர் பதவிக்கான நபரை தேர்ந்தெடுக்கும் செயல்பாடுகள் விரைவில் தொடங்க இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தலைவர் பதவியில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் வர மாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். தற்போது பிரியங்கா காந்தி கூறுகையில் ராகுல் காந்தியின் கருத்தை ஆமோதித்து பேசியுள்ளார்.

காங்கிரஸில் குடும்ப ஆட்சி நடைபெறுவதாக பலர் அடிக்கடி குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்த பேச்சை உடைப்பதற்காக காந்தி குடும்பம் இந்த முடிவை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.