திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (11:19 IST)

கொரோனாவிலும் பொருளாதாரத்தில் உயர்ந்த இந்தியா! – நிதியமைச்சர் பெருமிதம்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலுக்கான உரையை வாசித்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரம் குறித்து பெருமிதமாக கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்பட்ஜெட் மீதான அறிமுக உரையை வாசித்து வருகிறார்.

அதில் அவர் “உலகின் பெரிய நாடுகளில் இந்தியாவே மிக வேகமாக பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தற்சார்பு இந்தியா திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் அளிப்பதை கொள்கையாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “மேக் இன் இந்தியா திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும். நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.