1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (07:51 IST)

இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி: யார் யார் போட்டு கொள்ளலாம்?

booster
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இன்று முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி இருந்தன என்பதும் பெரும்பாலானோர் இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது பூஸ்டர் தடுப்பூசியும் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது