வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (19:45 IST)

விரைவில் திருப்பதியில் இலவச தரிசனம்: சுப்பா ரெட்டி அறிவிப்பு!

விரைவில் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறங்காவலர் தலைவர் பதவியை ஏற்ற சுப்பா ரெட்டி அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே அறங்காவலர் தலைவர் பதவியில் இருந்த சுப்பாரெட்டி இன்று மீண்டும் அதே பதவிக்கு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதி இலவச தரிசனம் அனுமதிக்கப்படாமல் உள்ளன 
 
இந்த நிலையில் இது குறித்து அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை செய்து விரைவில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார் 
 
முதல்கட்டமாக குறைவான பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் படிப்படியாக அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தற்போது 300 ரூபாய் தரிசனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது