ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 8 ஜூலை 2020 (22:46 IST)

இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் மூன்று மாதம் வரை நீட்டிப்பு!

இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகத் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரொனா காலக்கட்டம் என்பதால் வரும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து வருவதால் அவர்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகத் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதாவது :

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ்  மேலும் 3 திட்டங்களுக்கு அதாவது செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.