வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 15 ஜூலை 2024 (17:23 IST)

திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ.! டிடிஎஃப் வாசனுக்கு சம்மன்.!!

TTF Vasan
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக இருந்த புகாரில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அம்மாநில போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
 
விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாகச் சர்ச்சைக்குரிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் சிறைத் தண்டனைக்குப் பிறகு டிடிஎஃப் வாசன் வெளியே வந்திருந்தார். 
 
டிடிஎஃப் வாசன் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனையோடு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பதி மலைக்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்றிருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன், சாமி தரிசன வரிசையில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். 

சாமி கும்பிடுவதற்காகக் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முதன்மை கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், திருமலை முதலாவது நகர் காவல் நிலையத்தில் வாசன் மீது புகார் அளிக்கப்பட்டது.


அந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து விளக்கம் அளிக்க கோரி டிடிஎஃப் வாசனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.