1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 7 ஜூலை 2021 (08:44 IST)

முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலம் மனைவி டெல்லியில் கொலை!

kitty kumara
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் கொலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம். இவரது மனைவி கணவரின் மரணத்திற்கு பின்னர் டெல்லியில் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவரது வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியின்போது கிட்டி குமாரமங்கலத்தை கொள்ளையர்கள் கொலை செய்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
 
டெல்லியில் உள்ள வசந்த் விஹார் என்ற பகுதியில் நடந்த இந்த கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கிட்டி குமாரமங்கலத்தை கொலை செய்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இருவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது