முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (20:16 IST)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
 
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியா இருந்த கர்ணன் கடந்த 12ஆம் தேதி ஓய்வு பெற்றார். ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற கொல்கத்தா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டியில் தமிழக காவல்துறையினர் உதவியுடன் கொல்கத்தா காவல்துறையினர் முன்னாள் நீதிபதி கர்ணனை கைது செய்தனர்.
 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :