1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (06:24 IST)

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67
 
முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். எனவே தான் அவர் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் அவருக்கு கவர்னர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்று திடீரென சுஷ்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சையின் பலனின்றி காலமாகிவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.
 
சுஷ்மா ஸ்வராஜ் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மற்றும் பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
 
பொது சேவைக்காக வாழ்வை அர்ப்பணித்த ஒரு உன்னத பெண் தலைவரை இந்தியா இழந்துள்ளதாக பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். அனைத்து கட்சியினரிடமும் நல்ல நட்பு கொண்டவர் என்றும், அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் முக ஸ்டாலின், உள்பட பல தலைவர்கள் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.