வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 3 செப்டம்பர் 2014 (13:04 IST)

மாரடைப்பால் உயிரிழந்தார் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி

முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

சட்டத்துறையில் நாட்டின் மிக உயரிய பதவியான அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்த முதல் இசுலாமியர் வாஹன்வதி.

13 ஆவது அட்டர்னி ஜெனராலாக, அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டார்.

3 ஆண்டுகளில் அவரது பதவி முடிவடைந்த நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி தனது பதவியை ஜி.இ. வாஹன்வதி ராஜிநாமா செய்தார்.

முன்னதாக, மகாராஷ்டிர மாநில அரசுத் தலைமை வழக்குரைஞராகவும், 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனராலாகவும் வாஹன்வதி பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஒரு மனைவியும் மகனும் உள்ளனர்.