Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வங்கிக்கே சென்று கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த பலே கில்லாடி கைது!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 15 மார்ச் 2017 (14:44 IST)
10 லட்சம் மதிப்பிலான சில்ரன் பாங்க் ஆப் இந்தியா என அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
 
ஹைதராபாத்த்தில் உள்ள அலஹாபாத் வங்கியில் ரூ.9.90 லட்சம் மதிப்பிலான சில்ரன் பாங்க் ஆப் இந்தியா என அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயற்சித்த நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
 
டெபாசிட் செய்யவிருந்த பணக் கட்டுகளில் மேல் உள்ள நோட்டுகளை மட்டும் புதிய ரூபாய் நோட்டுகளாக வைத்துவிட்டு உள்ளே சில்ரன் பாங்க் ஆப் இந்தியா என அச்சிடப்பட்ட நோட்டுகளை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
 
இதில், 400 போலி 2000 ரூபாய் நோட்டுகளும், 380 போலி 500 ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளது.
 
டெல்லியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்யிலிருந்தும் சில்ரன் பாங்க் ஆப் இந்தியா என அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :