வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (11:21 IST)

தேன் கூட்டில் கை வைத்த தொழிலாளி: உயிரை உறிஞ்சிய தேனீக்கள்

கேரளாவில் தேன் கூட்டில் கை வைத்த தொழிலாளி ஒருவரை தேனீக்கள் விரட்டி விரட்டி கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கன்னூர் பகுதியை சேந்தவர் பாபு. இவர் அதே பகுதியில் உள்ள ரப்பர் மரத்தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். அன்று சக ஊழியர்களுடன் பராமரிப்பு பணிகளுக்காக மரத்தின் மேல் ஏறியுள்ளார். திரும்ப இறங்கும்போது ஒரு கிளையின் மீது இருந்த தேன் கூட்டை தெரியாமல் தட்டிவிட்டு விட்டார்.

உடனே அதிலிருந்த தேனீக்கள் அவரை தாக்க தொடங்கியுள்ளன. உடனே அவர் மரத்திலிருந்து கீழே குதித்தார். கீழே நின்று கொண்டிருந்த மற்ற ஊழியர்களையும் தேனீக்கள் தாக்க தொடங்கியதால் அனைவரும் அங்கிருந்து ஓட தொடங்கினர். பாபுவும் ஓடியிருக்கிறார். அவரை விடாமல் துரத்தி வந்த தேனீக்கள் அவரை உடலில் பல பகுதிகளும் கொட்டியிருக்கின்றன. தேனீக்களின் தாக்குதலால் நிலைகுலைந்து போன பாபு மயங்கி விழுந்திருக்கிறார். அதற்குள் ஓடி போன ஊழியர்கள் தீப்பந்தங்களை எடுத்து வந்து தேனீக்களை விரட்டி பாபுவை மீட்டிருக்கின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபு தேனீக்களின் விஷம் உடலில் அளவுக்கதிகமாக பரவியிருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனீக்களின் இந்த கொடூர தாக்குதல் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.