ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2020 (09:11 IST)

மிலிட்டரி கேண்டீனில் வெளிநாட்டு பொருட்களுக்கு தடா !

நாடெங்கும் உள்ள மிலிட்டரி கேண்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடருக்கு பின் இந்தியாவில் பொருளாதார மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் அதை சரிசெய்யும் விதமாக உள்நாட்டு பொருட்களை வாங்க மக்கள் ஊக்குவிக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக நாடெங்கும் உள்ள 1700 மிலிட்டரி கேண்டீன்களில் ஜூன் 1ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரான பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 13ம் தேதி அறிவித்திருந்தார்.

இந்த உத்தரவு நேற்று முதல் அமலான நிலையில், 70 வெளிநாட்டு நிறுவனங்களின் 1,026 தயாரிப்பை விற்க விதிக்கப்பட்ட தடையை  மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.