பணக்கார பெண்ணுக்காக .. காதல் மனைவியை கொன்ற கொடூரன் !

kerala
Last Modified திங்கள், 29 ஜூலை 2019 (14:07 IST)
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அம்பூரி பகுதியில் வசித்துவருபவர் அகிலேஷ்(26).இவருக்கும் திருபுறம் பகுதியைச் சேர்ந்த ராகி மோள் (29) என்ற பெண்ணுக்கும் மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
தன்னை விட வயதில் மூத்த ராகிலை, அகிலேஷ் மனதார விரும்பியுள்ளார். இவருக்கும் பிடித்துபோகவே இருவரும் காலித்து கோயிலில் வைத்து ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
 
இந்நிலையில் அகிலேஷின் வீட்டார் அவருக்கும் பணக்கான பெண்ணை திருமணம் செய்துவைக்க தீர்மனித்தனர். இதனால் ராணுவத்தில் வேலை பார்த்துவந்த அகிலேஷ் கடந்த மாதம் 21 ஆம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அந்த சமயம் ஒரு பணக்கார பெண்ணை திருமணத்துக்காக பேசிமுடித்துள்ளனர். இதையடுத்து ராகிமோளுக்கு தெரிந்து இதுகுறித்து அகிலேஷிடன் கேட்டுள்ளார். அகிலேஷ் வீட்டாருக்கும் இந்த திருமனத்திற்கு இடையூராக ராகிமோள் உள்ளதாக கோபத்துடன் இருந்ததாகத் தெரிகிறது.
 
தன்னை விட்டு அகன்றுவிடுமாறு அகிலேஷ் ,ராகிமோளிடம் கேட்டுள்ளானர். அதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றுதெரிகிறது.  பின்னர் ராகிமோளிடம் சமாதானம் பேச வீட்டுக்கு அழைத்துப் போக அகிலேஷ், மற்றும் அவரது தம்பி ராகுல் இவரும் வந்துள்ளனர்,அப்போது காருக்குள்ளேயேவைத்து ராகிலை கழுத்தை நெறித்து இருவரும் கொன்றுள்ளனர். இதனையடுத்து வீட்டின் பின்புறம் ஏற்கனவே தோண்டிவைத்த குழிக்குள் ராகிலைப்ம் போட்டு புதைத்து அதன் மேல் பாக்கு மட்டைகளை வைத்து மூடியுள்ளனர்.
 
ராகிமோளை காணவில்லை என்று துப்பறிந்து வந்த போலீஸாருக்கு முதலில் ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் புதைத்த இடத்தில் கிடைத்த செல்போன் சிக்னலை வைத்து அகில் மற்றும் ராகுலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :