1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:27 IST)

தீபிகா படுகோன் படத்திற்காக... ஒரு தியேட்டரையே புக் செய்த முன்னாள் முதல்வர் !!!

உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனின் ’சப்பக் ’படத்தைப் பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் சமாஜ்வாதி கட்சி தலைவர்  அகிலேஷ் யாதவ், தன் தொண்டர்களுடன் இணைந்து, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்த ’சப்பக்’ என்ற படத்தை  பார்க்க உள்ளார்.
 
சமீபத்தில், டெல்லி ஜே.என்.யு வில் மாணவர்கள் மீது தாக்குதல் நடந்ததற்கு நடிகை தீபிகா படுகோ எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கு பாஜக தரப்பில் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரது நடிப்பில் வெளியாக உள்ள, சப்பக் படத்தை புறக்கணிக்க வேண்டும் எனதெரிவித்தனர்.
இந்நிலையில், தீபிகா படுகோன் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  சமாஜ்வாதி கட்சி தலைவர்  அகிலேஷ் யாதவ், தன் தொண்டர்களுடன் இணைந்து, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்த ’சப்பக்’ என்ற படத்தை  பார்க்க உள்ளார் என தகவல்கள் வெளியாகிறது.