வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (11:59 IST)

தமிழகத்தை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கிய புதுச்சேரி; உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

தமிழக அரசை தொடர்ந்து புதுச்சேரி அரசும் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல செய்துள்ளது. புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

 
புதுச்சேரி அரசு சார்ப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை. அரசு கொறடா சார்ப்பில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இருந்தாலும் இதுமேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு கோரிக்கையை சேர்த்து வரும் 9ஆம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில் புதுச்சேரி சார்ப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவையும் சேர்த்து விசாரனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கையும், புதுச்சேரி அரசின் கோரிக்கையும் ஒன்றாக உள்ளதால் இதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.